திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (19:40 IST)

அடுத்து ஐரோப்பிய நாடுகள் தான் ரஷ்யாவுக்கு இலக்கு: உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்றியவுடன் அடுத்த இலக்கு ரஷ்யாவுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகத்தான் இருக்கும் என உக்ரைன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உக்ரைன் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைன் நாட்டிற்குள் முன்னேறி வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் உக்ரைன் முழுவதும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் இதுகுறித்து கூறியபோது, உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி விட்டால் அடுத்து ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்றும் அதற்குள் இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது