புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (08:05 IST)

தோல்வியை ஒப்புக்கொண்ட டிரம்ப்: வைரலாகும் டுவிட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வி அடையவில்லை என்றும் ஜோ பிடன் வெற்றியை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறிவந்த டொனால்ட் டிரம்ப், தற்போது தனது டுவிட்டரில் ஜோபிடனின் வெற்றியை சூசகமாக ஒப்புக் கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதன் மூலம் எதார்த்தத்தை அவர் புரிந்து கொள்ளத் தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது
 
இது குறித்து தனது டுவிட்டரில் வாக்கு எண்ணிக்கையின் போது கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் ஒரு சில ஊடகங்கள் உதவியோடுதான் இந்த வெற்றியை ஜோபிடன் பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். வெற்றியை பெற்றுள்ளார் என குற்றஞ்சாட்டியதை அடுத்து ஜோபிடனின் வெற்றியை அவர் ஏற்றுக்கொண்டதாகவே இந்த டுவிட் காட்டுவதாக அரசியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இருப்பினும் டிரம்ப் நான் தோல்வி அடைந்தேன் என்பதை வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிரம்பின் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விரைவில் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது