காசாவை அமெரிக்கா விலைக்கு வாங்கும்.. கட்டிடங்கள் இடிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு..!
காசாவை அமெரிக்கா விலைக்கு வாங்க இருப்பதாகவும், அங்கு ஏற்கனவே பல கட்டிடங்கள் இடிந்த நிலையில் மீதமுள்ள கட்டிடங்களும் இடித்து சுத்தம் செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியில் டிரம்ப் கூறியதாவது:
"காசா என்பது ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எல்லோரும் எண்ணிக் கொள்ள வேண்டும். அதை விலைக்கு வாங்கி மாற்றி அமைக்க வேண்டும் என்று உறுதி கொண்டு உள்ளேன். ஹமாஸ் மீண்டும் தலை தூக்காமல் இருக்க வேண்டும் என்றால் அந்த இடத்தை அமெரிக்கா வாங்க வேண்டும். அது ஒரு இடிபாடு தளம். அந்த இடத்தில் ஏற்கனவே வாழ்ந்த மக்கள் மீண்டும் வாழ விரும்பவில்லை. எனவே மீதமுள்ள கட்டிடங்கள் இடிக்கப்படும்.
காசா மக்களுக்கு மாற்று ஏற்பாடாக புதிய இடத்தில் வீட்டை கட்டிக் கொடுக்க முயற்சி செய்யப்படும் அல்லது ஜோர்டான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு நிரந்தர புகலிடம் வழங்க வேண்டும். போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்," என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், காசாவில் ஏற்பட்ட போரை பயன்படுத்தி அந்த பகுதியை பாலஸ்தீனத்திடமிருந்து பறிக்க டிரம்ப் திட்டமிடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஜெர்மன் அதிபர் இதனை டிரம்பின் மோசடி என்று விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva