தனி கட்சி துவங்கி 2024 தேர்தலில் போட்டி? ட்ரம்ப் திட்டம் என்ன?

Sugapriya Prakash| Last Updated: திங்கள், 1 மார்ச் 2021 (10:50 IST)
2024 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். 

 
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் 2 வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப்,  தோல்வியை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து நீண்ட காலமாக பொதுவெளியில் தென்படாமல் இருந்த ட்ரம்ப் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 
 
அதில், 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவேன். எனக்கு புதிய கட்சியை துவங்குவதில் விருப்பம் இல்லை.  பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது. ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :