1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (13:45 IST)

கைக்கு மீறிய பட்ஜெட், தனி விமானம் வேண்டாம்: டிரம்ப் அதிரடி!

அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்துவதற்காக விசேஷ கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 


 
 
அமெரிக்க அதிபருக்கான ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களை 1943ம் ஆண்டிலிருந்து அந்நாட்டை சேர்ந்த போயிங் நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்து வருகிறது. 
 
இந்நிலையில், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் போயிங் 747-200பி என்ற இரண்டு விமானங்கள் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
 
அவற்றை இயக்குவதற்கான செலவும், பராமரிப்பும் மிக அதிகமாக இருக்கிறது. இந்த இரண்டு விமானங்களும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 
இந்நிலையில், அமெரிக்க அதிபருக்காக வாங்கப்பட இருக்கும் புதிய போயிங் விமானங்கள் ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், புதிய போயிங் விமானங்களுக்கான பட்ஜெட் 4 பில்லியன் டாலர் என்று குறிப்பிட்டிருப்பதுடன், இது கைக்கு மீறிய பட்ஜெட் என்றும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
இதனால், அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் டொனால்டு டிரம்ப்.