புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (10:35 IST)

ஜோ பைடன் நிர்வாகத்திற்கு அதிர்ஷ்டம் துணை நிற்கட்டும்: ட்ரம்ப் வாழ்த்து!

ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதையொட்டி நாட்டுமக்களிடம் விடைபெறும் வகையில் காணொலி மூலம் உரையாற்றினார். 

 
அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். 
 
இதனையடுத்து அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் இன்று அதாவது ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அதேபோல் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதையொட்டி நாட்டுமக்களிடம் விடைபெறும் வகையில் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது, புதிதாக பதவியேற்கவுள்ள நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஜோ பைடன் நிர்வாகத்திற்கு அதிர்ஷ்டம் துணை நிற்கட்டும் என்றும் தெரிவித்தார். 
 
அதேபோல அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. அரசியல் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். ஆனால், இன்றைய பதவியேற்பு விழாவின் போது ட்ரம்ப் ஆதரவாளர்களால் எந்தவித அசம்பாவிதத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க பாதுகாப்புப் பணியில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.