புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (08:04 IST)

செப்டம்பர் 29: உலக இதய தினம்!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அந்த தினத்தில் உலக மக்கள் அனைவரும் தங்களுடைய இதயத்தை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கடந்த 1999 வரை செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதய தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது ஆனால் அதன் பின்னர் அது செப்டம்பர் 29ஆம் தேதி ஆக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பாலர்களும் 30 வயதுக்கு மேல் இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறை இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே உலக இதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக இதய தினம் முன்னிட்டு இன்று பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதயம் சார்ந்த பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இதயத்தில் ஏற்படும் நோய்கள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பது இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்க ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற விழிப்புணர்வு என்று மருத்துவர்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.