சைக்கிளில் 280 கிமீ வேகத்தில் பயணம் செய்த நபர்.. உலக சாதனை
இங்கிலாந்து நாட்டில் North Yorkshireல் உள்ள Elvington விமான தளத்தில் சைக்கிளில் சுமார் 280. 5 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது இது உலக சாதனையாக கருதப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் North Yorkshireல் உள்ள Elvington விமான தளத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில், கடந்த சனிகிழமை சாதனை படைக்கப்பட்டது.
அதவாது எக்சஸ் மாகாணத்தைச் சேர்ந்த நெய்ல் காம்பெல் என்ற நபர் தான் விஷேசமாக தயாரித்த சைக்கிளால் மணிக்கு 280. 55 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தி புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக கடந்த 1995 ஆம் ஆண்டு நெதர்லாந்தை சேர்ந்த பிரட் ரோம்பெல்பெர்க் என்பவர் 268. 8 கிலோ மீட்டர் வேகத்தில் சைக்கிளை இயக்கியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.