1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (09:14 IST)

கொரோனா வைரஸ் குறித்து முதல்முதலாக எச்சரித்த மருத்துவர் மரணம்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ்
சீனாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 600 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வைரஸ் குறித்து முதல் முதலாக எச்சரிக்கை செய்த டாக்டர் ஒருவர் அதே வைரஸ் தாக்கியதில் உயிரிழந்த பரிதாபம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.
 
கொரோனா வைரஸ் குறித்து முதல்முறையாக லீ என்ற மருத்துவர் தான் சீனாவின் அரசு இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை எழுதினார். இந்த கட்டுரையில் கொரோனா எவ்வளவு அபாயகரமானது என்றும், அந்த வைரஸ் மக்களிடம் தொற்றினால் உலகம் முழுவதும் விளைவு கடுமையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த கட்டுரையை எழுதியவர் சமீபத்தில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியானது இந்த நிலையில் நேற்று அவர் மரணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணச் செய்திகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன என்றும், அவரது மரணம் குறித்து சீன அரசு தெளிவான தகவலை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 100 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது