1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (20:08 IST)

உருமாறிய கொரோனா வைரஸ் படம் இதுதான்: பிரிட்டன் - கொலம்பியா பல்கலை வெளியீடு!

உருமாறிய கொரோனா வைரஸ் படம் இதுதான்:
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய கோடிக்கணக்கானவர்களை பாதித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு உருமாறிய கொரோனா வைரஸ் இரண்டாம் அலையாக பரவிவருகிறது
 
பிரிட்டனில் தொடங்கிய இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனை மட்டுமன்றி பல நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் மிக மோசமாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே கொரோனா முதல் வைரஸ் முதல் அலை குறித்த புகைப்படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் புகைப்படத்தை பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
 
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உருமாறிய கொரோனா  வைரஸின் புகைப்படம் கிட்டத்தட்ட ’வி’ என்ற ஆங்கில எழுத்து கொண்டிருப்பதாகவும் அடிப்பகுதியில் நீலக்கலரில் நுனிப்பகுதியில் சிகப்பு கலரில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது