புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (06:41 IST)

மன்னருக்கு எதிரான ஒரே வார்த்தையால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்

தாய்லாந்தில், சிராவித் செரிவித் என்ற முக்கிய அரசியல் ஆர்வலரின் தாயார், அந்நாட்டு மன்னரை அவமானப்படுத்திய குற்றச்சாட்டின்பேரில், ராணுவ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

 
சமூக வலைத்தளத்தில், ஒரே ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பட்னரி சங்கிஜ் என்ற அந்தப் பெண் பயன்படுத்திய வார்த்தை ஜா. அதாவது, ஆம் என்று அர்த்தம்.
 
அரச குடும்பத்தை விமர்சித்து, ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் தனிப்பட்ட முறையில் வெளியான கருத்துக்கு அவர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதுதான் பிரச்சினை.
 
புதிய அரசியல் சட்ட வரைவு தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அந்த அரசியல் சட்டம், நாட்டில் ராணுவ ஆட்சியைப் பேணுவதற்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
 
இந்த நிலையில், இதுதொடர்பாக எழுப்பப்படும் எதிர்ப்புக் குரல்களை ராணுவ ஆட்சி ஒடுக்கி வருகிறது.