திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே ஒரு பக்கம் ரஷ்யா - உக்ரைன் போர் பல வருடங்களாக முடியாமல் உள்ளது. அதேபோல், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் முடிந்ததாக கூறப்பட்டாலும் இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போர், இந்தியா - வங்காளதேசம் போர் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
 
உலகின் பல நாடுகள் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
போர் விமானங்களை பயன்படுத்தி கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதாகவும், கம்போடியாவும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த மாதம் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது இரு நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமின்றி, உலக நாடுகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva