1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (16:56 IST)

ரஷ்யாவில் வாட்ஸ் அப் தடை எதிரொலி: முதலிடத்தை பிடித்த டெலிகிராம்!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்நாட்டில் பல சமூக வலைதளங்கள் செயல்படவில்லை என்பது தெரிந்ததே. குறிப்பாக பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் தங்கள் சேவையை ரஷ்யாவில் நிறுத்திக்கொண்டது
 
மேலும் ரஷ்யா பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் போர் குறித்த தவறான செய்திகள் வருவதை தடை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் ரஷ்யாவில்  வாட்ஸ் அப்தடை செய்யப்பட்டதை அடுத்து அங்கு டெலிகிராம் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமானது
 
போர் தொடக்கத்தின் போது ரஷ்யாவில் டெலிகிராமின் பயன்பாடு 48 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 63 சதவீதமாக அதிகரித்துள்ளது 
 
இதனால் ரஷ்யாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜ் செயலிகளில் வாட்ஸ் அப்பை பின்னுக்கு தள்ளிவிட்டு டெலிகிராம்  முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது