திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (16:25 IST)

மாணவனும், ஆசிரியரும் உடலுறவு: தப்பித்த மாணவன்; மாட்டிக்கொண்ட ஆசிரியை!

மாணவனும், ஆசிரியரும் உடலுறவு: தப்பித்த மாணவன்; மாட்டிக்கொண்ட ஆசிரியை!

17  வயதான பள்ளி மாணவனுடன் ஆசிரியர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டுள்ளதில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. அந்த ஆசிரியருக்கு 23 வயது தான் ஆகிறது.


 
 
அமெரிக்காவின் கான்கார்ட் நகரில் காக்ஸ் மில்லி என்ற உயர்நிலைப்பள்ளியில் கேதரின் ரிடென்ஹார் என்ற 23 வயது இளம் ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த விவகாரம் தற்போது வெளியில் தெரிய வந்ததால் அந்த ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த மாணவனுக்கு 17 வயது என்பதால் மைனர் என்ற அடிப்படையில் தப்பித்துவிட்டான். உயர் பொறுப்பில் இருந்து கொண்டு மாணவனுடன் தகாத உறவு கொண்டது கிரிமினல் குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
 
இந்த செயலில் ஈடுபட்ட ஆசிரியர் கேதரின் தனது பணியை ராஜினாமா செய்துள்ள நிலையில்  அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.