1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (14:07 IST)

முகத்தை மறைக்காத பெண்கள் மிருகங்கள்: தாலிபான்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

hijab33
முகத்தை மறைக்காத பெண்கள் மிருகங்கள்: தாலிபான்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
 
இந்தநிலையில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் அணியாத பெண்களை மிருகங்களுடன் ஒப்பிட்டு தாலிபான்கள் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பொதுவெளியில் முகத்தையும் உடலையும் மறைக்கும் விதம் ஆடைகளை அணியாத பெண்களின் அரசு பணிகள் பறிக்கப்படும் என்றும் தாலிபான்கள் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
மேலும் முகத்தையும் உடலையும் முழுமையாக மறைக்காத பெண்கள் மிருகங்கள் போல் இருக்க முயற்சிப்பதாக அந்நாட்டின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் சார்பில் போஸ்டர் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது