மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய தாலிபான்கள்
ஆப்கானிஸ்தான் மாணவிகள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் பிரதமராக பைடன் பதவியேற்ற பின், தேர்தல் வாக்குறுதியின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாக அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர்.
பழமைவாதிகளாக தாலிபான்கள் கையில் நாடு சென்ற பின், அங்கு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். இதற்கு சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வட கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவுன் பல்கலைக்கழ நுழைவாயிலில், பெண்களை நுழைய விடாமல் சில தாலிபான் கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரப்பு ஏற்பட்டது. மேலும், ஒரு அதிகாரி மாணவிகளைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Sinoj