ஆப்கானியர்கள் நாடு திரும்ப வேண்டும் - தாலிபன் பிரதமரின் முதல் உத்தரவு!
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமர் முல்லா ஹஸன் அகுந்த் தனியார் தொலைக்காட்சி வாயிலாக பேட்டி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சி வாயிலாக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது...
ஆப்கானில் நல்லாட்சியை ஏற்படுத்த தாலிபான் அமைப்பு பெருமளவு பொருள் மற்றும் உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. தற்போது ஆப்கானை நல்வழியில் நடத்த நாங்கள் (தாலிபன்கள்) முயற்சித்து வருகிறோம். எனவே, நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும்.
பொதுமக்கள் இனி ரத்தம் சிந்தும் நிலை முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அரசாங்கத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.