சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் - சரண்டர் ஆகும் சுவிஸ் அரசு
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள பணம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக சுவிஸ் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் செய்து சட்டத்திற்கு விரோதமாக சேமித்த பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வருவதால் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகின்றன.
மேலும், இதுபோன்ற முறைகேடாக பணம் பதுக்கியுள்ளவர்களை பற்றி தகவல்களை சுவிஸ் அரசு தர மறுத்து வந்ததால் அந்நாட்டு அரசு கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வந்துள்ளது.
இந்நிலையில், சுவிஸ் வங்கியில் உள்ள ரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்ள தயார் என சுவிஸ் அரசு தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.
ரகசிய தகவல்களை அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, உருகுவே, இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 22 நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.