Last Updated : வெள்ளி, 25 நவம்பர் 2016 (15:26 IST)
சர்ஜிகல் ஸ்டிரைக்: ஓய்வு பெறும் நேரத்தில் சீண்டி பார்க்கும் பாக். தளபதி
நாங்கள் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் அதனை பல தலைமுறைக்கு மறக்க முடியாது என்று ஓய்வு பெற உள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீஃப் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசியதாவது: நமது நாட்டு எல்லைக்குள் இந்தியா ராணுவம் புகுந்தால், அவர்களுக்கு
தகுந்த பதிலடி கொடுப்போம். இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியதாக கூறுவது பொய். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் அதனை பல தலைமுறைக்கு மறக்க முடியாது என்றார். வருகிற 29 ம் தேதியுடன் ரஹீல் ஷெரீப் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.