புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 மார்ச் 2018 (17:26 IST)

சர்ச்சைக்குள்ளான சுந்தர் பிச்சையின் ஸ்ரீதேவி டுவீட்

நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்திய அளவிலும் உலக அளவிலும் பலர் இரங்கல் தெரிவித்தனர். அவருக்கு இரங்கல் தெரிவிக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு அவருடைய மரணம் அனைவரையும் பாதித்துள்ளது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் தமிழருமான சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில் ஸ்ரீதேவிக்கு இரங்கல் தெரிவித்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் ஸ்ரீதேவி நடித்த 'சத்மா' திரைப்படம் குழந்தை பருவத்தில் பார்த்தது என் நினைவில் உள்ளளது. அவர் நமக்கெல்லாம் முன்னோடி. பலரது வாழ்க்கையிலும் உந்துதலாக இருந்துள்ளார். உங்களது சோக இழப்பால் நாங்கள் வருந்துகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த டுவீட் தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இன்று என்னதான் அவர் கூகுளின் சி.இ.ஓவாக இருந்தாலும் அவர் பிறப்பால் ஒரு தமிழர். அவர் சிறுவயதாக இருந்தபோது 'சத்மா' பார்த்திருப்பாரா? அல்லது 'மூன்றாம் பிறை' பார்த்திருப்பாரா? தமிழில் ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறைதான் பின்னர் 'சத்மா' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அப்படியிருக்க தமிழ்ப்படத்தை அவர் குறிப்பிடாமல், இந்தி படத்தை குறிப்பிட்டது ஏன் என்று பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவரது டுவிட்டில் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். சுந்தர் பிச்சை முதலில் தனது தாய்மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.