1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (17:31 IST)

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேற தடை: நீதிமன்றம் உத்தரவு

mahinda
இலங்கையிலிருந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய சகோதரர் பசில் ராஜபக்ச ஆகிய இருவரும் வெளியேற தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இலங்கையில் பொருளாதார சீரழிவு காரணமாக அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார் 
 
இந்த நிலையில் அதிபர் கோத்தாபய ராஜபக்ஷவும் நாட்டைவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது
 
இலங்கையில் இருந்து தப்பிக்க இருவரும் வாய்ப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 28-ஆம் தேதி வரை இருவரும் நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.