1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (13:27 IST)

ஸ்பெயின் விமான நிலையத்தில் நிர்வாணமாக திரிந்த மர்ம நபர்!!

விமான நிலையத்தில் பயணி ஒருவர் உடலில் துணியின்றி நிர்வாண கோலத்தில் திரிந்த காட்சி விமான நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 


 
 
ஸ்பெயின் நாட்டின் விமான நிலையங்களுள் ஒன்றான சன் சாண்ட் ஜோன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 
 
தனது உடைகளை கலைந்து விட்டு நிர்வாணமாக நடந்து சென்ற அந்த மர்ம நபர் சிறிது நேரம் சுற்றித்திரிந்து பின்னர் அருகிலிருந்த கழிப்பறைக்கு சென்றுள்ளார். 
 
நிர்வாணமாக சுற்றித்திரிந்த மர்ம நபர் எங்கு சென்றார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
அந்த மர்ம நபர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.