'' நாட்டு நாட்டு'' பாடலுக்கு டான்ஸ் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள்
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில்,ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண், ஆலியாபட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் உலகம் முழுவதும் ஹிட்டாகி, வசூல் சாதனை படைத்தது.
இப்படத்தில் இடம்பெற்ற ''நாட்டு நாட்டு'' என்ற பாடலுக்காக இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் வைரலான நாட்டு நாட்டு பாடலின் ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள் இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பாடல் 6 லட்சம் பார்வையாளார்களையும், 6 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
ஓராண்டைக் கடந்து ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.