54 நொடிகள் இருளை உருவாக்கும் கடைசி கிரகணம்
தென் துருவமான அண்டார்ட்டிகா பகுதியில் தெரியும் 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நடைபெறுகிறது.
இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு தொடங்கி நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நடைபெறுகிறது. உலகின் தென் துருவமான அண்டார்ட்டிகா பகுதியில் மட்டுமே சூரிய கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மனித நடமாட்டம் குறைந்த அண்டார்டிகாவில் மட்டும் சூரிய கிரகணம் தெரியும் என்பதால் வானியல் ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சூரிய கிரகணம் தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் பகுதி சூரிய கிரகணமாக தெரியும். இந்த முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் ஒரு நிமிடம் 54 நொடிகள் இருளை உருவாக்கும்.