1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (18:31 IST)

ஆன்லைனில் பாடம் நடத்திய போது திடீரென தோன்றிய ஆபாச வீடியோ: மாணவிகள் அதிர்ச்சி

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் இருப்பதால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர்
 
ஆன்லைனில் பாடம் நடத்த உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் பயன்படுத்துவது ‘ஜூம்’ என்ற செயலியை தான். இந்த செயலி மூலம் ஆன்லைனில் பாடம் நடத்துவதற்கு மிகவும் எளிது என்பதால் இந்த செயலியை உலகின் பல நாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சிங்கப்பூரை சேர்ந்த கல்வி நிறுவனம் ஒன்று ஆன்லைனில் தங்களது மாணவர், மாணவிகளுக்கு பாடத்தை நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென அதில் ஆபாச படங்கள் தோன்றியது. இதை பார்த்துக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆன்லைன் படத்தை நிறுத்தி விட்டனர்
 
இதுகுறித்து விசாரணை செய்த போது ஹேக்கர்கள் இந்த செயலியை ஹேக்கிங் செய்து ஆன்லைனில் பாடத்திற்கு பதிலாக ஆபாச படத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிங்கப்பூர் அரசு ஜூம் செயலியை தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது