திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (05:09 IST)

5 மனைவிகளை 25 மில்லியன் பணத்திற்கு அடமானம் வைத்த இளவரசர்

மகாபாரதத்தில் சகுனியுடன் சூதாடிய தர்மர், தனது மனைவி பாஞ்சாலியை வைத்து சூதாடினார் என்று படித்திருக்கின்றோம். ஆனால் சவுதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உண்மையிலேயே தனது மனைவிகளை அடமானம் வைத்து சூதாடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.



 


சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த இளவரசர் மஜீட் பின் அப்துல்லா என்பவருக்கு சூதாட்டம் என்றால் அவ்வளவு விருப்பம். சூதாட்ட மோகத்திற்கு ஆளாகி உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். சமீபத்தில் எகிப்து சென்ற அவர் அங்குள்ள சினாய் கிராண்ட் கேசினோ சூதாட்ட விடுதியில் சுமார் ஆறு மணி நேரம் சூதாடியுள்ளார். ஆனால் அவருக்கு நேரம் சரியில்லாததால் கொண்டு சென்ற அனைத்து பணத்தையும் சூதாட்டத்தில் தோற்றுள்ளார். தோற்ற பணத்தின் மதிப்பு மில்லியன் கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இறுதியில் கையில் இருந்த பணத்திற்கு மேலும் சூதாடி தோற்றதால் சூதாட்ட கிளப்பிற்கு 350 மில்லியன் டாலர் பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. கையில் இருந்த பணம், நகை, கார் ஆகியவற்றின் மதிப்புகள் போக கடைசியாக மேலும் 25 மில்லியன் பாக்கி இருந்துள்ளது. எனவே இந்த தொகைக்காக அவர் அழைத்து வந்த ஐந்து மனைவிகளை சூதாட்ட விடுதியில் அடமானம் வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

இன்னும் ஒருசில நாட்களில் மனைவிகளை அவர் மீட்காவிட்டால் அவர்கள் ஏலத்திற்கு விடப்படும் நிலை ஏற்படும். எனவே சவுதி அரேபியாவின் அரச குடும்பம் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளது.