புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By

ஹஜ் புனித பயணம்… வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை – சவுதி அரேபியா அறிவிப்பு!

சவுதி அரேபிய அரசு இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்கு 60000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவுக்கு ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வர் பக்தர்கள். இதில் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கோவிட் தொற்றைக் கணக்கில் கொண்டு பயணியர்களின் எண்ணிக்கைக் குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு சவுதி அரேபியாவைச் சேர்ந்த 60000 பேர்களுக்கு மட்டுமே புனித பயணத்துக்கான அனுமதி வழங்கப்படும்.