திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (08:51 IST)

அவர் புக்குல 2 பக்கம்தான் படிச்சேன்..! – சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்றவர்!

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்றவர் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிக பிரபலமான எழுத்தாளராக அறியப்படுபவர் சல்மான் ருஷ்டி. இவரது நள்ளிரவின் குழந்தைகள் என்ற புத்தகம் பெரும் வரவேற்பை பெற்ற அதே சமயம் பல விமர்சனங்களையும், கொலை மிரட்டல்களையும் சல்மான் ருஷ்டிக்கு பெற்று தந்தது.

கடந்த சில நாட்கள் முன்னதாக நியூயார்க்கில் நிகழ்வு ஒன்றில் பேசிக் கொண்டிருந்த சல்மான் ருஷ்டியை ஆசாமி ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மருத்துவமனையில் அவசரசிகிச்சையில் இருந்து வந்த சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்துள்ளார்.

சல்மான் ருஷ்டியை தாக்கிய ஹாதி மாட்டர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “அவர் உயிர்பிழைத்துவிட்டார் என கேள்விபட்டபோது ஆச்சர்யம் அடைந்தேன். ருஷ்டியின் சர்ச்சைக்குரிய புத்தகத்தில் இருந்து நான் 2 பக்கங்கள் மட்டுமே படித்தேம். அவரை எனக்கு பிடிக்கவில்லை.

சவ்தாகுவாவுக்கு அவர் வருகிறார் என ட்விட்டர் மூலமாக தெரிந்தபோது அங்கு செல்ல எனக்கு தோன்றியது. அவர் இஸ்லாம் மீது அவதூறாக பேசியுள்ளார். அவரை நானாகத்தான் தாக்கினேன்” என்று கூறியுள்ளார்.