ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கும் சீன அதிபர்.. உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தையா?
சமீபத்தில் மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினை அடுத்த வாரம் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இரண்டு முறை சீன அதிபராக இருந்த ஜின்பிங் கடந்த வாரம் மீண்டும் சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இதனை அடுத்து உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு மேலாக உக்ரைன் - ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரை நிறுத்துவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட ரஷ்ய அதிபர் புதினை சீன அதிபர் ஜின்பிங் நேரில் சந்திக்க இருப்பதாகவும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யா மற்றும் சீன அதிபர்கள் நேரில் சந்திக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva