1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (17:40 IST)

கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கைகள் துண்டிப்பு.. ஆப்கானிஸ்தானில் பயங்கர தண்டனை

robbers
கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கைகள் துண்டிப்பு.. ஆப்கானிஸ்தானில் பயங்கர தண்டனை
ஆப்கானிஸ்தான் நாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு கொள்ளையர்களின் கைகளை வெட்டி தண்டனையை தாலிபான் அரசு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் அரசு ஏற்பட்டதிலிருந்து பெண்களின் உரிமை பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அவ்வப்போது மரண தண்டனைகளும் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகளின் கைகளை பொதுமக்களின் முன்னிலையில் வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது 
இதுபோன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும் தாலிபன் அரசு அதை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக கடும் தண்டனைகளை அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva