1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2016 (15:49 IST)

7 பேருடன் விடுதியில் உல்லாசம் : போலீசாரிடம் சிக்கிய கத்தார் இளவரசி

7 பேருடன் விடுதியில் உல்லாசம் : சிக்கிய இளவரசி

லண்டனில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி, கத்தார் இளவரசி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரும், ஸ்காட்லாந்து யார்டு போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு குற்றவாளியை தேடி அவர்கள் அங்கு சோதனை நடத்தியதாக தெரிகிறது. 
 
அப்போது, அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் ஒரு பெண், ஏழு ஆண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவர்கள் அனைவரையும் கையும் களவுமாக பிடித்த போலீசார், அந்த பெண்ணின் அடையாள அட்டையை சோதனை செய்தனர். 
 
அது போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம், அந்த பெண் கத்தார் நாட்டு இளவரசி ஷெய்கா சல்வா என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் இதுபற்றி கத்தார் தூதரகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
 
எப்படியோ இந்த செய்தி வெளியே பரவி லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்த செய்தியை ஒளிபரப்பின. தங்கள் நாட்டு இளவரசி, 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்த போது, போலீசாரிடம் பிடிபட்ட விவகார்ம கத்தார் நாட்டு மக்களையும், அரச குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.