ராணுவத்தில் சேர விரும்பிய கொலைகாரன்.. மன்னிப்பு வழங்கிய அதிபர்..!
கொடூரமாக கொலை செய்த கொலைகாரன் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்ததை அடுத்து அந்த கொலைகாரனுக்கு மன்னிப்பு அளித்த ஜனாதிபதி குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியை 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். இதனை அடுத்து அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது அவர் ராணுவத்தில் சேர்ந்து உக்ரைனுக்கு எதிராக போரிட விரும்புகிறேன் என விருப்பம் தெரிவித்தார். இதனை அடுத்து அவருக்கு ரஷ்யா அதிபர் புதின் மன்னிப்பு வழங்கி ராணுவத்தில் சேர்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
ராணுவ உடையுடன் கொலைகாரன் தற்போது இருக்கும் புகைப்படம் பார்த்து தன் மனம் உடைந்து விட்டதாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran