வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (10:30 IST)

பப்ஜி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்; விரைவில் வருகிறது பப்ஜி நியூ ஸ்டேட்!

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள பப்ஜி விளையாட்டின் அடுத்த வெர்சன் விரைவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகமாக விளையாடப்படும் ஆன்லைன் கேமாக பப்ஜி உள்ளது. ஒரே சமயத்தில் பலபேர் சேர்ந்து விளையாடலாம் என்பதுடன், அதிலேயே ஆடியோ மூலமாக பேசிக் கொள்ளலாம் என்பதாலும் இந்த விளையாட்டில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கென பப்ஜி இந்தியா என்ற கேம் அறிமுகமானது. இந்நிலையில் பப்ஜி விளையாட்டில் மேலும் பல அப்டேட்கள் மற்றும் வசதிகள் கொண்ட பப்ஜி நியூ ஸ்டேட் என்ற கேம் நவம்பர் 11ம் தேதியன்று உலக அளவில் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆன்லைன் கேம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.