சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை நீக்க இளவரசர் மறுப்பு
சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் கார் ஓட்டுவதற்கான தடைநீக்குவது குறித்த கேள்விக்கு இளவரசர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில், சாலையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. ஏனென்றால் அங்கே பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நகரங்களில் உள்ள பெண்கள் கார் ஓட்டுவதற்கு சில சலுகைகள் உள்ளன.
இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பெண்களை கார் ஓட்ட அனுமதிப்பது, மத ரீதியான பிரச்சனை என்பதையும் தாண்டி சமூக ரீதியாகவும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
மேலும், ’பெண்களுக்கு கூடுதல் சுதந்திரம் கிடைப்பதற்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் ஆனால் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது வருங்காலங்களில் மாற்றங்கள் ஏற்படும்’ என்று கூறினார்.
சவுதியில் பெண்களுக்கென நிறைய கட்டுப்பாடு விதிமுறைகள் உள்ளன. அங்குள்ள பெண்கள் வேறு நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் பெறுவதற்கு கூட அவர்களுடைய பாதுகாவலரின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.