விலையுயர்ந்த காரை ஓட்டிய 5 வயது சிறுவன்: பெற்றோர்களை தேடும் போலீஸார்!
விலையுயர்ந்த காரை ஓட்டிய 5 வயது சிறுவன்
5 வயது சிறுவன் கார் ஓட்டும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த சிறுவனின் பெற்றோரை போலீசார் தேடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாகிஸ்தானில் 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக லேண்ட் க்ரூஸர் என்ற காரை ஓட்டிச் செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் ஐந்து வயது சிறுவனிடம் காரை கொடுத்து பிஸியான சாலையில் ஓட்டச் செய்த பெற்றோருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அந்த பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்
இந்த நிலையில் பாகிஸ்தானில் 5 வயது சிறுவன் தனியாக லேண்ட் க்ரூஸர் காரை ஓட்டிச் செல்லும் வீடியோ வைரல் ஆனதை அடுத்து சிறுவனின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர் என்று தகவல் வந்துள்ளது. விரைவில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது