போலாந்து நாட்டில் காந்தியின் தபால் தலை..
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை ஒட்டி, போலாந்து நாடு காந்தியின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியை போற்றும் வகையில் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் காந்தியின் சிலை திறக்கப்பட்டது. மேலும் சீனாவின் இந்திய தூதரகத்தில் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஐ.நா.வில் பிரதமர் மோடி, காந்தியின் தபால் தலையை வெளியிட்டார். இந்நிலையில், நேற்று போலாந்து நாட்டின் தபால் சேவை நிறுவனமான போக்ஸ்டா போலக்ஸா, மகாத்மா காந்தியின், உருவபடத்த கொண்ட தபால் தலையை வெளியிட்டுள்ளது. மேலும் பிரான்ஸ், பாலஸ்தீனம், துருக்கி ஆகிய நாடுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் கொண்ட தபால் தலை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.