ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (22:00 IST)

ஃபீல்டிங் புயல் ஜாண்டிரோட்ஸ் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் ரசிகர்களாக இருந்த பலருக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாண்டிரோட்ஸ் குறித்து கண்டிப்பாக தெரிந்திருக்கும். எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் பேட்டிங் செய்தாலும் அவரை தாண்டி பந்து போகவே முடியாது. புயல் போல கண்ணிமைக்கும் நேரத்தில் கேட்ச் பிடித்து பேட்ஸ்மேனை பெவிலியனுக்கு அனுப்பும் திறமை வாய்ந்தவர்



 


இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்தபோது மும்பையில் அவருடைய மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தியாவில் பிறந்த தனது குழந்தைக்கு இந்தியா என்றே பெயரிட்டார்.

இந்நிலையில் ஜாண்டி ரோட்ஸ் தனது மகளுக்கு 2வது பிறந்த நாள் என்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, 'இந்தியாவுக்கு இந்தியா சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்' என்று பதிலளித்திருந்தார்.

பிரதமரின் வாழ்த்து டுவீட்டை பார்த்த ஜாண்டி ரோட்ஸ் மிகவும் நெகிழ்ந்து, 'நன்றி மோடிஜி, இந்த மண்ணில் பிறந்த எனது மகள், மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளாள்’’ என்று கூறியுள்ளார்.