புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (20:06 IST)

காட்டுத் தீயில் உயிரிழந்த கங்காருவின் புகைப்படம் ... மனதை நெருடுகிறது....

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அங்கிருந்த உயிரினங்கள் எல்லாம் தீயில் கருகி உயிரிழந்தன. இந்நிலையில் ஒரு கங்காரு மற்றும் ஒரு பாண்டா கரடியின் கைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள போர்ட் மக்குயர் என்ற பகுதிக்கு அருகில் இருந்த ஒரு வனப்பகுதியில்  திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 2000 ஏக்கர் காடுகள் தீயில் எரிந்து நாசம் ஆயின.
 
அங்கு உயிர்வாழ்ந்து வந்த பல்வேறு உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்நிலையில், அன்று தீயில் கருகி உயிரிழந்த பாண்டா கரடியின் கை மற்றும் ஒரு கங்காருவின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றனது. இந்தப் புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்வதாக உள்ளது.