ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 மார்ச் 2018 (15:54 IST)

வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய சபாநாயகர்...

வழக்கமாக நாடாளுமன்றத்தை விட்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதை காண்டிருக்கிறோம். ஆனால், வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் வெளிநடப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடைபெற்றது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக பதவி வகிப்பவர், அயாஸ் சாதிக். இவர் சபயை நடத்திக்கொண்டிருந்த போது, உள்துரை தொடர்பாக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். 
 
இதற்கு பதில் அளிக்க வேண்டிய குறிப்பிட்டதுறை மந்திரி சபையில் இல்லை. பாகிஸ்தான் நாடாளுமன்ற விதிகளை மீறி மந்திரி செயப்பட்டதால் எரிச்சல் அடைந்த சபாநாயர், நாடாளுமன்றத்தினை அவமதிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். எனவே நான் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன் என கூறி வெளியேறினார். 
 
இதோடு இல்லாமல், இனி எந்த ஒரு நாடாளுமன்ற அமர்வையும் ஏற்று நடத்தமாட்டேன் என கூறியுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் சம்மந்தப்பட்ட துறை அமைச்சகங்களின் அதிகாரிகள் இருப்பார்கள் என்று பிரதமர் வாக்குறுதி அளிக்கிற வரையில், நான் சபையை நடத்த மாட்டேன் என்றும் கூறினார்.