எக்ஸ் நிறுவனத்தை வாங்க தயார்.. எலான் மஸ்கிற்கு பதிலடி கொடுத்த ஓபன் ஏஐ சிஇஓ..!
ஓபன் ஏ ஐ நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் முயன்று கொண்டிருக்கும் நிலையில், மஸ்க் விரும்பினால் எக்ஸ் நிறுவனத்தை நாங்கள் வாங்க தயார் என ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மென் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி தொழில் அதிபர் எலான் மஸ்க் தற்போது அமெரிக்காவின் முக்கிய பதவியில் இருக்கும் நிலையில் அவர் பல்வேறு மாற்றங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் எலான் மஸ்க், ஓபன் ஏஐ நிறுவனத்தை விற்க அந்நிறுவனத்தின் சிஇஓ சாம ஆல்ட்மேன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ நிறுவனத்தை யாருக்கும் விரும்பவில்லை என்றும், ஒருவேளை எக்ஸ் நிறுவனத்தை எலான் விற்பதாக இருப்பதாக இருந்தால் அதை நாங்கள் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran