தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு? சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு இருந்துவரும் நிலையில் இன்றும் 9 பேர்கள் மட்டுமே புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
தற்போது தமிழகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 86 என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
இன்று கொரோனா பாதிப்பு அடைந்த ஒன்பது பேர்களில் மூன்று பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva