திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (18:01 IST)

’ரொமான்ஸ் செய்வதற்கு அனுமதி இல்லை’ - பல்கலைக்கழகம் அறிவிப்பு

’ரொமான்ஸ் செய்வதற்கு அனுமதி இல்லை’ - பல்கலைக்கழகம் அறிவிப்பு

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ’ரொமான்ஸ் செய்வதற்கு அனுமதி இல்லை’ என்று சுவரொட்டி மூலம் அறிவித்துள்ளது.
 

 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
 
சிங்கள மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்களால் கொடுக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் மேற்படி சிங்கள மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும் அது தொடர்பாக அந்த மாணவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த திடீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்ளது.
 
இது தொடர்பான சுவரொட்டியில், ”படிக்கும் அறையின் உள்ளே ரொமான்ஸ் செய்வதற்கு அனுமதி இல்லை. ஒழுங்கை கடைபிடிக்கவும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.