செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (15:13 IST)

48 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 ஏவுகணைகள்... வடகொரியாவை அதிர்ச்சியுடன் பார்க்கும் உலக நாடுகள்!

missile
வடகொரியா நாடு அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளை 48 மணி நேரத்தில் ஏவி உள்ள நிலையில் சர்வதேச நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்ம் வடகொரியா ஏவுகணை ஏவிய நிலையில் அது ஜப்பான் பகுதியில் விழுந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது 
 
கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டு இருப்பதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளதால் வடகொரியாவின் இந்த செயல் குறித்து உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. 
 
இது குறித்து தென்கொரியா ராணுவ படை தளபதி கூறிய போது கடற்கரையின் கிழக்கு பகுதியை நோக்கி வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை ஏறி உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனை ஜப்பான் பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran