ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (10:43 IST)

மின்சாரம் இன்றி தவிக்கும் மருத்துவமனைகள்.. காசாவில் பெரும் பதட்டம்..!

இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது என்றும், ஆனால் காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

இஸ்ரேலின் தொடர் ஏவுகணை தாக்குதலால், மின்சாரம் இன்றி தவிக்கும் காசா மருத்துவமனைகள் இருப்பதால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளதை அறிந்து இஸ்ரேலுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஜோர்டான் மன்னர் மற்றும் பாலஸ்தீன அதிபருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் போர் நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இஸ்ரேல் பிரதமர், அதிபரை சந்தித்து இஸ்ரேலுக்கான தனது ஆதரவை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்  ஆண்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran