புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (17:40 IST)

எதிர்க் கட்சி எம்.பி குழந்தைக்கு நாடாளுமன்றத்திலே பாலூட்டிய சபாநாயகர்

நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் பாலூட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

நியூஸிலாந்து நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சியாக இருப்பவர் டமாட்டி காஃபே. இவருக்கும் இவரது மனைவிக்கும் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற கூட்டத்திற்கு வந்த டமாட்டி தன் குழந்தையையும் கொண்டு வந்திருந்தார். அவையில் கையில் குழந்தையை வைத்து கொண்டு பேசிக்கொண்டிருப்பதை பார்த்தார் சபாநாயகர் ட்ரெவோர் மலார்ட். அந்த குழந்தையை தூக்கி தன் மடியில் வைத்து கொண்டு டமாட்டியை சிரமமின்றி பேச சொல்லியிருக்கிறார். பிறகு அந்த குழந்தைக்கு புட்டியில் இருந்த பாலை ஊட்டி விட்டிருக்கிறார்.

அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ட்ரெவோர் ” வழக்கமாக சபாநாயகர் இருக்கையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அமர்வார்கள். ஆனால் இன்று ஒரு முக்கிய விருந்தாளி என்னோடு அந்த இருக்கையை பகிர்ந்து கொண்டார். உங்கள் குடும்பத்தின் புதிய வரவுக்காக வாழ்த்துக்கள் டமாட்டி மற்றும் டிம்.” என்று கூறியுள்ளார்.