நவாஸ் ஷெரீப்பின் தாயார் மரணம்...
பனாமா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னள் பிரதமர் நவாஸ் ஷெரீப்க்கு கடந்த 2018 ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது மகள் மரியம் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகளும் மருமகன் சப்தர்க்கு ஒரு ஆண்டும் தண்டனை விதிக்கப்பட்டது.
இதில், நவாஸ் ஷெரிப் கடந்த ஆண்டு ஜாமீன் பெற்று உடல் நலகுறைவால் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நவாஸ் ஷெரீப்பின் தாய் பேகம் ஷைம் அக்தர், லண்டனில் நேற்று காலமானார். பேகம் ஷமிம் அக்தர் கடந்த பிப்ரவரி மாதம் ஷெரிப்புடன் தங்கியிருந்தார். இந்நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் நேற்று காலமானார்.
இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால்தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாததால் லண்டனில் ஹெரீப் இறுதிச் செய்ததாகத்தெரிகிறது.