ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:42 IST)

இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம்: நாசா அறிவிப்பு!

இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் குறித்த அறிவிப்பை அமெரிக்காவின் நாசா அமைப்பு வெளியிட்டுள்ளது 
 
வானில் தோன்றும் மாயா ஜாலங்களில் சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணங்களை உண்டு என்பதும் இவை அவ்வப்போது தோன்றி மக்களை ஆச்சரியப்படுத்தும் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நாசா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பார்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த நூற்றாண்டின் நீண்ட நீண்ட நேரம் சந்திர கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க பொதுமக்களுக்கு பல ஏற்பாடுகளை செய்ய முற்படும் என்பது குறிப்பிடத்தக்கது