ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (19:59 IST)

திருமண விருந்தில் சாப்பிட்டவருக்கு பில் அனுப்பிய மணமகன் வீட்டார்: பெரும் பரபரப்பு

திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்திவிட்டு பின்னர் மொய் செய்துவிட்டோ அல்லது பரிசுப்பொருட்களை கொடுத்துவிட்டோ வருவதுதான் உலகம் முழுவதும் நடைபெறும் வழக்கமாக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் திருமண வீட்டிற்கு வந்த ஒருவர் நிர்ணயித்த அளவை விட அதிகமாக சாப்பிட்டதாக பில் அனுப்பியுள்ள கொடுமை நடந்துள்ளது
 
 
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகனுடன் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார். மணப்பெண் வீட்டார் நடத்திய இந்த திருமணத்தில் குழந்தைகளுக்கு என தனி உணவு மெனுவும், பெரியவர்களுக்கு தனி உணவு மெனுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  தனது மகன் 16 வயதை எட்டியிருந்ததால் அந்த பெண் பெரியவர்களுக்கான உணவையே இருவரும் சாப்பிட்டனர். பின்னர் மணமக்களை வாழ்த்திவிட்டு வீடு திரும்பிய பின்னர் மணப்பெண்ணின் வீட்டில் இருந்து அந்தப் பெண்ணுக்கு ஒரு பில் வந்தது.
 
 
அதில், உங்களது மகன் குழந்தைகளுக்கான மெனுவை தேர்வு செய்யாமல், பெரியவர்களுக்கான உணவை சாப்பிட்டுள்ளதால் அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் நீங்கள் அந்த தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பில்லை பார்த்ததும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உண்மையில் 18 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள் மெனுவை சாப்பிட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது
 
 
ஆனால் அந்த பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திருமண நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான மெனு 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு என்று நினைத்ததாகவும், அதற்காக இப்படி பில் அனுப்பி பணம் கேட்பார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் புலம்பியுள்ளார்.