கனடா மற்றும் மேற்கு அமெரிக்காவில் அனல்காற்று- 100 பேர் பலி!
கனடா மற்றும் மேற்கு அமெரிக்காவில் அதிகரித்து வரும் வெப்பத்தால் 100 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கனடா மற்றும் மேற்கு அமெரிக்கா ஆகிய பகுதிகளில் வெப்ப அதிகரிப்பு காரணமாக அனல் காற்று வீசிவருகிறதாம். சில மாதங்களுக்கு முன்னர் 45 டிகிரி செல்சியசாக பதிவான வெப்பநிலை, தற்போது, 49.5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. இதனால் 134 பேர் வரை பலியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வெப்ப அதிகரிப்புக்கு அந்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயும் ஒரு முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது.