1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (00:20 IST)

புதிய கிரகத்திற்கு பெங்களூர் மாணவி பெயர்: அமெரிக்கா கொடுக்கும் கெளரவம்

அமெரிக்காவில் லிங்கன் ஆய்வகம், புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் ஒன்றுக்கு பெங்களூர் மாணவி ஒருவரின் பெயரை வைத்து கெளரவம் அடைய செய்துள்ளது.



 


அமெரிக்காவின் மசெசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்தும் இன்டர்நேஷனல் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் ஃபேர் எனப்படும் போட்டி பள்ளி மாணவர்களுக்கான உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டியாகக் கருதப்படுகிறது. இந்த போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாஹிதி பிங்கலி என்பவர் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்

இந்த வெற்றியை அடுத்து அவரது பெயரை புதிய கிரகம் ஒன்றுக்கு சூட்டப்படும் என்று லிங்கன் ஆய்வகம் அறிவித்துள்ளது. நீர்நிலைகளின் சுத்தத்தைக் கண்காணிக்க உதவும் மொபைல் அப்ளிகேஷன் குறித்த அறிக்கை தான் சாஹிதியின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.